Home உலகம் வதந்திகளுக்கு ஏமாந்து விடக் கூடாது!– ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

வதந்திகளுக்கு ஏமாந்து விடக் கூடாது!– ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

559
0
SHARE
Ad

rajapakseஇலங்கை, ஏப்ரக்ல் 8- தீய சக்திகளினால் பிரசாரம் செய்யப்பட்டு வரும் வதந்திகளைக் கேட்டு ஏமாந்து விடக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களிடம் கோரியுள்ளார்.

இன, மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி குழப்பங்கள் விளைவிப்பதனை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டுச் செயற்படுவதன் மூலம் சவால்களை வெற்றிகொள்ள முடியும். ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது.

மேலும், குறைந்த வருமானமுடைய மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.