Home உலகம் ஐ.நா. அமர்வில் ஜனாதிபதி மகிந்த நாளை விசேட உரையாற்றுகிறார்!

ஐ.நா. அமர்வில் ஜனாதிபதி மகிந்த நாளை விசேட உரையாற்றுகிறார்!

715
0
SHARE
Ad

செப். 23- வடமாகாண சபைத் தேர்தல் தோல்வித் தகவலுடன் நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் நாளை செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளார்.

Sri Lanka's President Mahinda gestures during a meeting in Colomboஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2005 ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் 6வது தடவையாக உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி மகிந்த இவ்விஜயத்தின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் ஷர்மா மற்றும் ஆசிய, ஆபிரிக்கக் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளை, ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்காக நியூயோர்க்கில் இரவு விருந்துபசாரமொன்றையும் ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளார் என அறியவருகிறது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகப்பெரும, பா.உ. சஜின்வாஸ் குணவர்தன, பா.உ.. லொஹான் ரத்வத்த, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.