Home One Line P1 வைரமுத்து மலேசிய நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

வைரமுத்து மலேசிய நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

1001
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் வந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வருகை தந்து, நாடாளுமன்ற மேலவையின் தலைவரும், மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் விக்னேஸ்வரன் வைரமுத்துவுக்கு தனது அலுவலகத்தில் மதிய விருந்துபசரிப்பு நடத்தி கௌரவித்தார்.

இச்சந்திப்பின்போது, மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டத்தோஸ்ரீ எம். சரவணன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ. இராஜேந்திரன், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, டான்ஸ்ரீ கே.எஸ். நல்லா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசியல் நிலவரம், தமிழக அரசியல் நிலவரம் உட்பட, இலக்கியம், கவிதை என பல்வேறு தகவல்களை வைரமுத்து இந்த விருந்துபசரிப்பு சந்திப்பின் போது பரிமாறிக் கொண்டார்.

வைரமுத்துவின் நாடாளுமன்ற வருகையின்போது எடுக்கப்பட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்: