Home One Line P1 சாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது!

சாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது!

822
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 20 வாகனங்களின் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு  72,209.57 ரிங்கிட் என்று அலையன்ஸ் பொது காப்பீட்டுக் கிளை மேலாளர் பாங் தெரிவித்தார்.

13-வது சாட்சியாக இருக்கும் பாங், நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா முன் தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை வாசிக்கும் போது இந்த விஷயத்தை வெளியிட்டார்.

பாங்கின் அறிக்கையின்படி, கார் காப்பீட்டுத் தொகை 56,615.62 ரிங்கிட்டுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், மோட்டார் சைக்கிள் காப்பீட்டுத் தொகை 15,593.95 ரிங்கிட்டுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

லெக்ஸஸ் எல்எக்ஸ் 570, இரண்டு டொயோட்டா வெல்பையர், மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் 350, ஆடி (நிறுவனம்) கியூ 7 4.2 (), கிறைஸ்லர் ஜீப் ரேங்லர், ஹோண்டா ஒடிஸி, மினி கூப்பர் எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 320i () ) ஆகியவை அதில் அடங்கும்.

இதற்கிடையில், அகமட் சாஹிட்டின் மனைவியான ஹமிடாவின் பெயரில் வாங்கப்பட்ட காப்பீட்டுத் தொகையானது, பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 காருக்காகவும், டொயோட்டா லேண்ட் குரூசர் எஸ்யூவி மரியோ காருக்காகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சாஹிட் ஹமீடி வாங்கிய மோட்டார் சைக்கிள்களில் இரண்டு ஹார்லி டேவிட்சன், டுகாட்டி டயவெல் கார்பன், பிஎம்டபிள்யூ சி 600 ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ், பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஆர்டி மற்றும் ஹோண்டா சி 100 ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், ஹமிடா பெயரில் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் மற்றும் கவாசாகி கேஎல்எக்ஸ் 250 வி ஆகியவற்றை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அகமட் சாஹிட் ஹமீடி, 47 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவற்றில் 12 நம்பிக்கை மீறல், எட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அகால்புடி அறக்கட்டளையின் நிதி சம்பந்தப்பட்ட 27  பண மோசடி குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

இவ்விசாரணை வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி தொடரும்.