Home One Line P1 பிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது!

பிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது!

659
0
SHARE
Ad

மலாக்கா: நேற்று வியாழக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற பிகேஆர் இளைஞர் மற்றும் மகளிர் மாநாட்டின் தொடக்க விழாவில் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.

அஸ்மின் காரில் இருந்து வெளியே வந்து இறங்கிய தருணம் தொடங்கி, அவ்விடத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்த கூட்டம் அவரை நோக்கி எழுந்து, கட்டிடத்திற்குள் நுழைந்ததும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பிகேஆர் தேசிய மாநாடு மலாக்கா அனைத்துலக வணிக மையத்தில் (எம்ஐடிசி) நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

முன்னதாக, அன்வாருக்கும், அஸ்மினுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் கட்சியை பிளவுப்படச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், கடந்த ஒரு வருடமாக கட்சியின் முக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத அஸ்மின் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் அன்வாருடன்  சந்தித்து,  கலந்து பேசியதற்குப் பிறகு கட்சியில் சுமுகமான சூழ்நிலையை இனி எதிர்ப்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மாநாட்டை அஸ்மின் அலி தொடக்கி வைப்பார் என்று முந்தையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.