வாஷிங்டன்: ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தொடரில் அடுத்த வருடம் வெளிவர இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 25-வது படமான “நோ டைம் டு டை” படத்தின் முதல் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.
இங்கிலாந்து இராணுவத்தில பணிபுரிந்த ஐயன் பிளெமிங் தன்னுடைய இராணுவ அனுபவங்களை மையப்படுத்தி உருவாக்கிய துப்பறியும் உளவாளி பாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட்.
1962-இல் முதல் முறையாக டாக்டர் நோ படத்தின் மூலம் சினிமாவில் இந்தக் கதாப்பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 50 ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் இந்தப் படத்தொடர் பிரபலமாக உள்ளது. மிக நீண்ட காலம் நீடிக்கும் உலகின் படத்தொடராக விளங்குவது ஜேம்ஸ் பாண்ட்.
இதுவரையிலும் சீன் கானரி முதல் டேனியல் கிரேக் வரை ஒன்பது பேர் இந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளனர். இறுதியாக டேனியல் கிரெக் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்றுள்ளார். அடுத்த படத்திலிருந்து வேறு நபர் இந்தப் பாத்திரத்தை ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நோ டைம் டு டை படத்தினை இயக்குனர் கேரி ஜோஜி புகுனாகா இயக்கியுள்ள வேளையில், வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: