Home One Line P2 9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்ச நீதிமன்றம்...

9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

783
0
SHARE
Ad

புதுடில்லி – தமிழகத்தில் நடத்தப்பட இருந்த உள்ளாட்சித் தேர்தல்களுக்கு எதிராக திமுகவும், மேலும் சில தரப்புகளும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நேற்று வியாழக்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலையில் வழங்கியது.

அந்தத் தீர்ப்பின்படி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 9 புதிய மாவட்டங்களின் மறுவரையறை எல்லை மீண்டும் சீரமைக்கப்பட்டு அதன்பின்னரே அந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த மறுவரையறை எல்லை மறுஆய்வு அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்தப் புதிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீட்டுக் கொண்டது. புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்ற வேளையில், அந்தத் தீர்ப்புக்கு ஏற்ப உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவோம் என தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.