Home One Line P1 “பிகேஆர் கட்சி அன்வாரின் பின் எப்போதும் நிற்கும்!”- அஸ்மின் அலி

“பிகேஆர் கட்சி அன்வாரின் பின் எப்போதும் நிற்கும்!”- அஸ்மின் அலி

872
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சி அதன் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமை வெறுக்கத்தக்க மற்றும் அருவருப்பான அரசியல் தாக்குதல்களிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கும் என்று  கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

முகமட் யூசுப் ராவுத்தரின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து அன்வார் அளித்த விளக்கத்தை கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ஏற்றுள்ளதாகவும், அருவருப்பான அரசியல் கலாச்சாரத்தை தொடர்ந்து அக்கட்சி நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

உடன்படாதவர்கள் அவதூறான நடைமுறைகளை எதிர்கொள்வதை விட ஆரோக்கியமான வாதங்களையும் சந்திப்புகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

#TamilSchoolmychoice

அன்வார் காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்வது உட்பட அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தை விசாரணைக்காக நாங்கள் காவல் துறையினரிடம் விட்டுவிடுகிறோம். இந்த கலாச்சாரத்தில் ஈடுபடும் எவரும் தண்டிக்கப்பட வேண்டும், ஏனென்றால் ஓர் அருவருப்பான அரசியல் கலாச்சாரத்திலிருந்து சுத்தமான சமூக சூழ்நிலையை நாம் விரும்புகிறோம்என்று அவர் நேற்றிரவு வியாழக்கிழமை பிகேஆர் மகளிர் காங்கிரஸை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

கடந்த நவம்பர் 19-ஆம் தேதியிட்ட தனது சத்தியப் பிரமாணப் பத்திரத்தில், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் அன்வார் மோசமான, அநாகரீகமான செயல்களுக்கும், அறிவுறுத்தலுக்கும் பலியானதாக யூசுப் ராவுத்தர் குற்றம் சாட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், அன்வார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து காவல் துறையில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.