Home One Line P1 “தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்!”- இஆர்சி

“தேர்தலின் போது வேட்புமனுத் தாக்கல் செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்!”- இஆர்சி

700
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்தலின் போது வேட்புமனு தாக்கலை சமர்ப்பிக்கும் ஒரு மணிநேர நியமன நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சிறப்பு தேர்தல் முறை மற்றும் குழுத் (இஆர்சி) தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ராஷீட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டின் தேர்தல் முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் மேம்படுத்த இஆர்சி முன்மொழிந்த 15 சீர்திருத்த அங்கங்களில் இந்த விவகாரமும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் சிரமல்லாத ஒன்றைச் செய்ய வேண்டும், வேட்பாளர்களாக நிற்க விரும்புவோருக்காக செயல்முறையை எளிதாக்குகிறோம். ஒரு மணிநேரம் இருப்பது சரியல்ல.”

#TamilSchoolmychoice

நம்மைப் போன்று எந்த நாடுகளும் செய்வதில்லை.  எனவே, உதாரணத்திற்கு ஐந்து நாட்களுக்குள் வேட்புமனுக்கள் வழங்கப்படுவதற்கு இஆர்சி சாத்தியமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, சாத்தியமான வேட்பாளர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. அமைதியாக உள்ளே சென்று தங்களை பதிவு செய்யலாம்என்று அவர் நேற்று வியாழக்கிழமை பெர்னாமாவிடம் கூறினார்.

இதற்கிடையில், வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளதைப் போல ஆறு மாதங்களுக்கு முன்னர் பொதுத் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான திட்டங்களும் உள்ளன என்று அப்துல் ராஷிட் கூறினார்.

தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதோடு,  தேர்தலுக்கான நிதிகளை திரட்டுவதற்கு அரசியல் கட்சிகளும் தயார் நிலையிலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ​​