Home One Line P1 பாஸ் கொண்டு வந்த ஹுடுட் சட்டத்தை மஇகா ஆதரிக்கும்!- டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

பாஸ் கொண்டு வந்த ஹுடுட் சட்டத்தை மஇகா ஆதரிக்கும்!- டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

863
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஹுடுட் சட்டமானது (RUU355) மக்களவையில் மீண்டும் முன்வைக்கப்பட்டால் மஇகா அதனை ஆதரிக்கும் என்று அதன் தலைவர் எஸ்..விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

நாங்கள் இந்த மசோதாவுக்கு எதிரானவர்கள் அல்ல. அதை மீண்டும் (மசோதா) கொண்டு வருமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம். நாங்கள் அதை ஆதரிப்போம், நான் அதை ஆதரிப்பேன்.”

அச்சட்டத்தை இயற்றுவது தவறல்ல. அது இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு சம்பந்தமில்லை.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், மத்திய அரசியலமைப்பு முஸ்லிமல்லாதவர்களுக்கு அச்சட்டத்தை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அச்சட்டதை ஆதரிக்க விரும்பினால் மத்திய அரசியலமைப்பிலிருந்து பாதுகாப்பு தேவை. அரசியலமைப்பு முஸ்லிமல்லாதவர்களைப் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், முவாபாக்காட் நேஷனலை நிறுவனமயமாக்க வேண்டும் என்ற அம்னோ இளைஞர்களின் முன்மொழிவுக்கு மஇகா ஒப்புக் கொண்டதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதனிடையே, விக்னேஸ்வரனின் இக்கருத்துக்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், இந்து சேவா சங்கம், தர்ம இயக்கம் மற்றும் உலக இந்து மன்றம் ஆகியவை கண்டங்களை தெரிவித்துள்ளன.