Home One Line P1 “மகாதீர் அஸ்மினை நீக்கச் சொன்னதாக அன்வார் கூறினார்!”- சுரைடா

“மகாதீர் அஸ்மினை நீக்கச் சொன்னதாக அன்வார் கூறினார்!”- சுரைடா

749
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2030 தூர நோக்கு இலக்குக் கூட்ட நிகழ்ச்சியின் போது சுரைடா சில மாதங்களுக்கு முன்பதாக தமக்கும் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கும் இடையிலான உரையாடலை வெளிப்படுத்தினார்.

அந்த உரையாடலின் போது, அன்வார் இப்ராகிம், அஸ்மின் அலி பாலியல் காணொளி தொடர்பாக பேசியதாகவும், அந்த காணொளியில் இருப்பது அஸ்மின் தான் என்று கூறியதாகவும் கூறினார்.

அது அஸ்மின் என்றால், அது உண்மையா என்று காவல் துறை விசாரிக்கட்டும். அஸ்மின் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விசாரணையை நடத்தட்டும்.” என்று அவர் கூறியதாக சுரைடா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த உரையாடலின் போது, பிரதமர் மகாதீரையும் அன்வார் மேற்கோள் காட்டியதாக சுரைடா குறிப்பிட்டுள்ளார்.

அவர் (அன்வார்) கூறினார், மகாதீர் அவரிடம் அஸ்மினை கட்சியிலிருந்து விலக்கக் கூறினார் என்று. நான் சொன்னேன், அஸ்மினை விலக்கக் கூறினால், ஏன் துன் மகாதீர்  நான்கு அறிக்கைகளை வெளியிட்டார், அஸ்மினுக்கு விடுப்பு தேவையில்லை, அஸ்மின் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று?” என்றார் சுரைடா.

உங்களுக்கு மகாதீரைத் தெரியாது என்று அன்வார் கூறியதாக சுரைடா கூறினார்.

அம்பாங்நாடாளுமன்ற உறுப்பினருமான சுரைடா கூறுகையில், தமக்கு பிரதமரும் கட்சித் தலைவர் அன்வாரும் அவ்வளவாக பழக்கம் இல்லாதவர்கள் என்று கூறினார்.

ஏன்? ஏனென்றால் நான் தனியாக வந்தேன். நான் எந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திலிருந்தும் வரவில்லை. நான் தனியாக இந்த கட்சிக்குள் வந்தேன். ஆகவே நான் அவரை (அன்வார்) அறிந்திருக்கவில்லை. நான் கட்சிக்குள் நுழைந்தபோது அவர் சிறையில் இருந்தார். அவர் 2004-ல் வெளியேறினார், ( பின்னர்) அவர் மீண்டும் உள்ளே சென்றார் (சிறை), எனக்கு எப்படி அவரை அறிந்திருக்க முடியும்?” என்று அவர் கூறினார்.