Home One Line P2 டெஸ்கோ மலேசிய, தாய்லாந்து சொத்துகளை விற்கிறது

டெஸ்கோ மலேசிய, தாய்லாந்து சொத்துகளை விற்கிறது

1049
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் பல்வேறு நகர்களில் இயங்கிவரும் பேரங்காடியான பிரிட்டனின் டெஸ்கோ நிறுவனம் மலேசியாவிலும், தாய்லாந்திலும் உள்ள தங்களின் பேரங்காடி சொத்துகளையும் வணிகத்தையும் விற்பனை செய்ய முன்வந்திருக்கிறது.

இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு 9 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

டெஸ்கோ, பிரிட்டனின் மிகப் பெரிய தொடர் பேரங்காடி நிறுவனமாகும்.

#TamilSchoolmychoice

டெஸ்கோ தங்களின் நிறுவனத்தின் வணிக வியூகத்தை மறு ஆய்வு செய்யும் வண்ணம் இந்த முடிவைப் பரிசீலித்து வருவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் வழி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டெஸ்கோ தாய்லாந்தில் 1998-ஆம் ஆண்டில் தொடங்கியது. அங்கு அதற்கு 1967 அங்காடிக் கடைகள் இருக்கின்றன. மலேசியாவில் 2002-இல் தொடங்கிய டெஸ்கோவுக்கு 74 அங்காடிக் கடைகள் இருக்கின்றன.

டெஸ்கோவின் தாய்லாந்து வணிகம் மட்டும் 7 பில்லியன் டாலர் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. காரணம், அங்கு சொந்த நில சொத்துடமைகளைக் கொண்டிருக்கும் காரணத்தால், டெஸ்கோ வணிகத்தின் மதிப்பு அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.