இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவில்லை எனக்கூறி திமுக மீண்டும் நீதிமன்றம் செல்லப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும்.
திமுகவின் புதிய வழக்கால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுமா என்ற கேள்விக் குறியும் எழுந்திருக்கிறது.