Home One Line P1 பிகேஆர்: “கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்!”-வான் அசிசா

பிகேஆர்: “கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்!”-வான் அசிசா

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் திட்டித் தீர்ப்பதை விட நாட்டை மீட்டெடுப்பதற்கான அவர்களின் போராட்டத்தில் அதிக நேர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை கட்சியின் ஆலோசனை மன்றக் குழுத் தலைவர் டத்தோ வான் அசிசா வான் இஸ்மாயில் நினைவுபடுத்தினார்.

சில தலைவர்களுக்கும், கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், மக்கள் ஆணையை ஏற்றுக்கொண்ட பின்னர் நாட்டின் கௌரவத்தை உயர்த்துவதற்கான காரியத்தை கைவிடுவதற்கு இது ஒரு காரணமாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

சுமார் 880 பிகேஆர் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, உற்சாகமாக உரையாற்றிய அசிசா, கண்டனத்தை ஏற்றுக்கொள்வதில் பிரதிநிதிகள் எப்போதும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அண்மையில் அன்வார் மற்றும் அஸ்மினுக்கு இடையில் சமரசம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, நேரடி தாக்குதல்கள் ஏற்பட்டு வருவது கண்கூடு.