Home One Line P2 கர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை!

கர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை!

866
0
SHARE
Ad

பெங்களூரு: கர்நடகாவில் இடைத்தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் இன்று திங்களன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், கர்நடகாவில் காங்கிரஸ் மிகப் பெரியத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அக்கட்சி பன்னிரெண்டு இடங்களில் இழக்கும் நிலையில் உள்ளதாகவும், பாஜக பெரிய வெற்றியைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டோம். மக்கள் தவறிழைத்தவர்களை ஏற்றுக் கொண்டனர்என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூலை மாதம் பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் காலி இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த 15 தொகுதிகளின் ஆணைக்கு நாங்கள் உடன்பட வேண்டும். மக்கள் தவறிழைத்தவர்களை ஏற்றுக்கொண்டதை என்னால் காண முடிகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

குறைந்த பட்சம் ஏழு இடங்களில் வெற்றியடைந்தால்தான் பாஜகஆட்சியை மீண்டும் தக்கவைக்க இயலும் என்று முன்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.