Home One Line P1 ரோஸ்மா பிறந்தநாளுக்காக 466,330.11 ரிங்கிட் விலையில் கடிகாரத்தைப் பரிசாக அன்பளித்த நஜிப்!

ரோஸ்மா பிறந்தநாளுக்காக 466,330.11 ரிங்கிட் விலையில் கடிகாரத்தைப் பரிசாக அன்பளித்த நஜிப்!

726
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமது மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தநாளுக்காக 466,330.11 ரிங்கிட் விலையில் ஒரு கடிகாரத்தை வழங்கியதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.

66 வயதான நஜிப், அவ்வருடத்தில் டிசம்பர் 22-ஆம் தேதியன்று அமெரிக்காவின் ஹொனலுலுவில் சேனல் பூட்டிக்கில் தனது கடன்பற்று அட்டையைப் பயன்படுத்தி அக்கடிகாரத்திற்கு பணம் செலுத்தியதாகக் கூறினார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி தொடர்பாக ஏழு எண்ணிக்கையிலான 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கு விசாரணையில் தனது வழக்கறிஞரான ரஹ்மாட் ஹஸ்லானின் வழக்கு பரிசோதனையின்போது இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் பாங்காக்கில் உள்ள ஷாங்க்ரிலா தங்கும்விடுதியில் 127,017.46 ரிங்கிட்டை செலவிட்டதாகவும், அது தனது கடன்பற்று அட்டை மூலம் செலுத்தப்பட்டதாகவும் நஜிப் தெரிவித்தார். இது, அவர் தாய்லாந்தில் தனிப்பட்ட விடுமுறையில் சென்றபோது செலவிடப்பட்டதாகக் கூறினார்.

இது ஒரு தனி விடுமுறையாக இருந்தபோதிலும், மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தை நிவர்த்தி செய்வதில் தாய்லாந்து அரசு நமக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி விவாதிக்க பிராயுத் சான்சாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும் பெற்றேன்,” என்று அவர் கூறினார்.

விடுமுறையின் போது அவர் பணிபுரிந்ததால் அரசாங்கத்திடமிருந்து ஏற்படும் செலவுகளுக்கு உரிமை கோர தனக்கு உரிமை இருப்பதாக நஜிப் கூறினார்.

ஆனால், விஷயங்களை சிக்கலாக்க நான் விரும்பாததால், எல்லா செலவுகளையும் நான் சொந்தமாக ஏற்கத் தேர்ந்தெடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று இத்தாலியின் சார்டினியாவில் உள்ள ஒரு நகைக் கடையில் செலவழித்த 3,282,734.16 ரிங்கிட்டில், மத்திய கிழக்கு பிரமுகரின் மனைவி ஒருவருக்கு பரிசாக நகைகளை வாங்குவதற்காகதான் என்று நஜிப் கூறினார்.