Home One Line P2 இந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

1011
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியக் குடியுரிமை தொடர்பிலான புதிய சட்டமொன்றை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மக்களவையிலும் அந்த சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சைகளையும், பல நகர்களில் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்திருத்தம் வழிசெய்கிறது. இந்த சிறுபான்மையினரில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சி இனத்தினர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்லாமியர்கள் இந்த சட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர் என கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பிலான அண்மைய செய்திகள் வருமாறு:

  • நாடாளுமன்ற மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் அடுத்து ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பின் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
  • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் புதிய சட்டத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
  • அசாம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, புதுடில்லி ஆகிய பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
  • அனைத்துலக மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் விடுத்திருக்கும் அறிக்கையில் இந்தியக் குடியுரிமை சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது நெருடலான ஒன்று என்றும் இந்த சட்டம் இந்தியாவின் இரு நாடாளுமன்ற அவைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடைகள் விதிக்க அமெரிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.