Home One Line P2 ரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு

ரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு

1056
0
SHARE
Ad

சென்னை – ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்து, எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கும் நிலையில், ரஜினியின் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘ரஜினி 168’ திரைப்படம் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

நடிகர் பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் இந்தப் படத்தில் இணைகின்றனர் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகை மீனாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினி உச்ச கட்ட நடிகராக பல படங்களில் நடித்து வந்த காலகட்டத்தில் மீனா, எஜமான், முத்து, வீரா என பல படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் குஷ்புவும் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. குஷ்புவும் ரஜினியுடன், அண்ணாமலை, பாண்டியன் போன்ற படங்களில் ஏற்கனவே கதாநாயகியாக நடித்தவர்.

#TamilSchoolmychoice

நகைச்சுவை நடிகர் சூரி, ரஜினியுடன் இணைவது இதுவே முதன் முறையாகும். பிரகாஷ் ராஜ் ரஜினியின் புதிய படத்தில் இணைவது படம் குறித்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.