கோலாலம்பூர்: ஜோ லோவிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றதோடு, தமது வங்கி தகவல்களை வெளிப்படுத்தியதற்காக, அம்பேங்க் மற்றும் அதன் முன்னாள் தகவல் தொடர்பு மேலாளர் ஜோனா யூ மீது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தற்போது மூன்று வங்கிக் கணக்குகள் குறித்து குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நஜிப், நிதிச் சேவைச் சட்டம் (எப்எஸ்ஏ) மற்றும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டம் 1989 (பாபியா) ஆகியவற்றை மீறி இந்தச் செயலைச் செய்ததாக அம்பேங் மற்றும் யூவிடமிருந்து இழப்பீடு கோரியுள்ளார்.
“இந்த வழக்கு, நிலையான நடைமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் செயல்பட்டு, வங்கி மற்றும் யூ இரு தரப்பும் தமக்கு விதிக்கபட்ட பொறுப்பை மீறுவதாகும். ஜோ லோ போன்ற அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு அறிவுறுத்தல்களை எடுத்து கணக்கு தகவல்களை வெளியிட்டது தவறு” என்று நஜிப் வழக்கறிஞர் முகமட் பார்ஹான் ஷாபி கூறினார்.
“இது குறித்து டத்தோஶ்ரீ நஜிப்புக்கு இந்த கணக்கின் நிலை மற்றும் தலையீடு குறித்து உடனடியாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, அவர் இருட்டில் விடப்பட்டுள்ளார்” என்று நேற்று செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டபோது பார்ஹான் கூறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.