Home One Line P1 70 தங்கப் பதக்கங்கள் எனும் இலக்கை எட்டாது, மலேசியா 55 தங்கங்களுடன் நாடு திரும்புகிறது!

70 தங்கப் பதக்கங்கள் எனும் இலக்கை எட்டாது, மலேசியா 55 தங்கங்களுடன் நாடு திரும்புகிறது!

670
0
SHARE
Ad

மணிலா: பிலிப்பைன்ஸில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 11) முடிவடையும், 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 55 தங்கப்பதக்கங்களுடன், மலேசியா தமது இலக்கினை எட்டாமல், ஐந்தாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

70 தங்கப் பதக்கங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய மலேசிய அணி  55 தங்கப் பதக்கங்கள், 58 வெள்ளி மற்றும் 71 வெண்கலங்களுடன் 2019-ஆம் ஆண்டுக்கான சீ விளையாட்டை முடித்துள்ளது.

இருந்தபோதிலும், போட்டியாளர்களின் சிறந்த முயற்சிகளினால், நேற்றைய செவ்வாய்க்கிழமை, போட்டியின் இறுதி நாளில் நான்கு தங்கங்களை மட்டுமே மலேசியா எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

முதலாவது இடத்தில் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ள வேளையில், இரண்டாவது இடத்தில் தாய்லாந்து, மூன்றாவது இடத்தில் வியட்னாம், மற்றும் நான்காவது இடத்தில் இந்தோனிசியா இடம்பெற்றுள்ளன.