Home One Line P1 மணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி

மணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி

813
0
SHARE
Ad

புத்ராஜெயா: “ஓன்றாக வெல்வோம்” என்னும் கருப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளுடன் நாடு திரும்பும் மலேசியக் குழுவினருக்கு பாராட்டையும் வரவேற்பையும் தெரிவிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“தென் கிழக்காசிய நாடுகளுக்கிடையே நவம்பர் 30- ஆம் நாள் தொடங்கிய இந்த மண்டல விளையாட்டுப் போட்டியில் 70 தங்கப் பதக்கங்களுக்கு இலக்கு வைத்து மணிலா சென்ற மலேசியக் குழுவினர் 55 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாலும் அடுத்தடுத்தப் போட்டிகளில் இன்னும் முனைப்பு காட்டினால் இலக்கை எட்ட முடியும். மலேசியக் குழுவில் இடம்பெற்று கராத்தே வழி தங்கப் பதக்கங்களை வாகை சூடிய வீரர் பிரேம்குமார், வீராங்கனை மாதுரி, பூப்பந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற கிஷோனா, உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற நவ்ராஜ் சிங், கராத்தே குமிட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மதிவதனி முருகேசன் உட்பட பதக்கம் வென்ற அனைரையும் பாராட்டுகிறேன்” என மலேசிய முற்போக்குக் கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.