கோலாலம்பூர்: பிடிபிடிஎன் பணத்தைத் திரும்பப்பெற முற்படுவது மற்றும் அவற்றை அகற்றுவது உள்ளிட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலிப்பதாக தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (பிடிபிடிஎன்) தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார்.
எவ்வாறாயினும், எந்தவொரு இறுதி முடிவிற்கும் அனைத்து திட்டங்களும், கருத்துகளும் கல்வி அமைச்சகம் மற்றும் அமைச்சரவைக்கு அனுப்பப்படும் என்று வான் சைபுல் கூறினார்.
“இப்போது பொறுத்தவரை, எங்கள் பொறுப்பு மிகப்பெரியது என்று நான் கருதுகிறேன். மேலும் ஏஎம்கே மற்றும் நம்பிக்கைக் கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பரிந்துரைகளை நான் வரவேற்கிறேன்.”
“தற்போதைக்கு நாங்கள் செய்யக்கூடியது, எங்கள் முதலீட்டு பிரச்சாரம் சீராக இயங்குவதை உறுதி செய்வதேயாகும், இதனால் மக்கள் கடனை நம்பியிருப்பதைக் குறைக்க முடியும்” என்று வான் சைபுல் கூறினார்.