புது டில்லி: கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்நிலையில், அசாமில் வன்முறையாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதற்றம் நிறைந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இந்த மசோதா குறித்து அசாம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் அசாம் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறை அங்கு வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.