நியூசிலாந்து: கடந்த திங்கட்கிழமை வெடித்த எரிமலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ஒயிட் தீவுக்கு அருகிலுள்ள நீரிலிருந்து மேலும் ஆறு சடலங்களை மீட்டுள்ளதாக நியூசிலாந்தில் போலீசார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நியூசிலாந்து காவல் துறைத் தலைவர் மைக் புஷ், தீவின் அருகே இன்னும் ஓர் உடல் இன்னும் தண்ணீரில் இருப்பதாகக் கூறினார்.
“மீட்பு செயல்முறை முடிவடையவில்லை,” என்று புஷ் கூறினார்.
காயமடைந்த 30 பேரில் 25 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மறுபடியும் அந்த எரிமலையில் வெடிக்கக்கூடும் என்று நியூசிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பலியானவர்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.