Home One Line P1 “அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது!”- காவல் துறை

“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது!”- காவல் துறை

767
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு சம்பவ இடமான, அவரது வீட்டை காவல் துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.

முகமட் யூசுப்பின் அறிக்கையின்படி, அவ்வீட்டின் விருந்தினர் அறை மற்றும் ஓர் அறை ஆகியவை பார்வையிடப்பட்டன என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (வழக்கு மற்றும் சட்டப் பிரிவு) தலைமை உதவி இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

புக்கிட் அமானில் விவரங்களைப் பெற்ற பிறகு, டத்தோஶ்ரீ (அன்வார் இப்ராகிம்) வீடு திரும்பினார். நாங்கள் பின் தொடர்ந்தோம். பார்வையிடப்பட்ட இடத்தின் அமைப்பு யூசுப் ராவுத்தர் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல உள்ளதுஎன்று நேற்று அஸ்ட்ரோ அவானி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

சத்தியை பிரமாணப் பத்திரத்தில் பெயரிடப்பட்ட ஒன்று அல்லது இரண்டு நபர்களை அழைக்க உள்ளதாக மியோர் பாரிடாலாத்ராஷ் கூறினார்.

கடந்த திங்களன்று, அன்வாரின் அநாகரீகமான நடத்தைக்கு எதிராக சாட்சியமளிக்க முகமட் யூசுப் புக்கிட் அமானுக்கு வந்தார். இந்த வழக்கில் சாட்சியமளிக்க நேற்று பிகேஆர் தலைவர் புக்கிட் அமானுக்கு வந்திருந்தார்.