கோலாலம்பூர்: ஒவ்வொரு தனி நபர் காரிலும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகளை (சிஆர்எஸ்) பயன்படுத்துவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் ஆறு மாதங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னரே சட்டபூர்வமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சீவ் பூக் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை வலியுறுத்தி, இந்த சட்டம் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், பாதுகாப்பு குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் ஆறு மாதங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், அதற்கு கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நான் அபராதங்களில் கவனம் செலுத்த விரும்பவில்லை. ஆறு மாதங்களாக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று கூறினோம், ஆனால் அதன் பின்னர் அச்சட்டம் அமல்படுத்தப்படாவிட்டால், (பின்னர்) அச்சட்டம் இயங்காது, ”என்று அவர் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.