புது டில்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல் துறையினர் குற்றப் பின்னணி கொண்ட 10 பேரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் அப்பகுதியே போர் பகுதியாகக் காட்சியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடந்த அந்த வன்முறையில் பேருந்துகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கல் வீச்சு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி போராட்டக்காரர்களை காவல் துறையினர் கலைத்தனர். மாணவர்களின் போராட்டக்களத்தில் ஒரு சிலர் உள்ளே நுழைந்து வேறேதும் வன்முறை முயற்சிகளை செய்ய முற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.