Home One Line P2 குடியுரிமைத் திருத்தச் சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும், நீதிமன்றம் உத்தரவு!

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும், நீதிமன்றம் உத்தரவு!

659
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வடக்கு மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தித்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இது தொடர்பாக வருகிற ஜனவரி 22-ம் தேதிக்குள் இச்சட்டம் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும், இந்த விசாரணையில், இச்சட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விண்ணப்பித்ததை, இந்த சட்டம் தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து நீதிபதி குழு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்

#TamilSchoolmychoice

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது

இந்த சட்டத்திருத்தமானது, தேசத்தின் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கையை பாதிக்கிறது என்றும், அனைத்து மதங்களின் உறுப்பினர்களுக்கும் சமமான உரிமையை வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் மனுதார்கள் குறிப்பிட்டுள்ளனர்