Home One Line P1 “முக்கியப் புள்ளி ஒருவரை சந்திக்க அசிலா சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது முற்றிலும் பொய்!”- சிறைத்...

“முக்கியப் புள்ளி ஒருவரை சந்திக்க அசிலா சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது முற்றிலும் பொய்!”- சிறைத் துறை

915
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த பிப்ரவரி மாதம் முக்கியப் புள்ளி ஒருவரை சந்திக்க முன்னாள் சிறப்புப் படை பிரிவு காவல்துறை அதிகாரி அசிலா ஹாத்ரி காஜாங் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா கூறிய குற்றச்சாட்டுக்கு மலேசிய சிறைத் துறை இன்று புதன்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.

அசிலா சிறையில் இருந்து வெளியேற்றப்படவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதியன்று தண்டனைக்கு காத்திருந்த கைதி சிப்பாங்கில் நீதிமன்ற நடவடிக்கைக்காக அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக, அது வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

எனவே, முக்கியப் புள்ளியைச் சந்திக்க அசிலா சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்ட கருத்துகள் முற்றிலும் பொய்யானதுஎன்று சிறைத் துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு முழுவதும் அசிலாவை அவரது குடும்பத்தினர் 34 முறை வந்து சந்தித்துள்ளதாகவும், காஜாங் சிறையில் 15 முறை அவரது வழக்கறிஞர் பார்வையிட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

முன்னதாக, வழக்கறிஞர் முகமட் ஷாபி மிகவும் நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அசிலா சிறையை விட்டு வெளியேறிய அறிக்கையை வெளியிடுவதாகவும், ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் கைதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.