Home One Line P2 நிர்பயா: மரணத் தண்டனையை சீராய்வு செய்ய அவசியம் இல்லை, உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

நிர்பயா: மரணத் தண்டனையை சீராய்வு செய்ய அவசியம் இல்லை, உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

680
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அக்ஷய் சிங்கின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

குற்றவாளிக்கு விதிக்கபட்டத் தீர்ப்பை சீராய்வு செய்ய அவசியம் இல்லை என்றும், அதனை மறுபரிசீலனை செய்ய எந்த காரணமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

டில்லியில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தின்போது நிர்பயா கடுமையாக தாக்கப்பட்டு பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

#TamilSchoolmychoice

நிர்பயாவை பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என ஆறு நபர்களை டில்லி காவல் துறை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராம்சிங் என்பவர் திஹார் சிறையில் 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட இளம் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நால்வருக்கு கடந்த 2013-ஆம் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.