Home One Line P1 “அசிலாவை நான் சந்தித்ததில்லை!”- துன் மகாதீர்

“அசிலாவை நான் சந்தித்ததில்லை!”- துன் மகாதீர்

830
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மங்கோலிய பெண்மணி அல்தான்துன்யா ஷாரிபுவைக் கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், முன்னாள் சிறப்பு நடவடிக்கை பிரிவு அரிகாரி அசிலா ஹாட்ரியை தாம் சந்தித்ததில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அசிலா வெளியிட்ட சத்தியப்பிரமாணப் பின்னணியில் மலேசிய அரசும் இருப்பதை டாக்டர் மகாதீர் மறுத்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இன்று (நேற்று புதன்கிழமை),  பல ஊடகங்கள் டாக்டர் மகாதீர் அசிலாவைச் சந்தித்தாரா இல்லையா என்று கேட்டபோது புன்னகைத்து தலையை அசைத்ததாகத் தெரிவிக்கின்றன.”

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரி மாதம் காஜாங் சிறையில், மரணத் தண்டனையை எதிர்கொள்ளும் அசிலாவை சந்தித்ததாகக் கூறப்படும் முக்கியப் புள்ளி டாக்டர் மகாதீர் என்ற கற்பனை செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா, பிப்ரவரி மாதம் முக்கியப் புள்ளி ஒருவர் அசிலாவை காஜாங் சிறையில் இருந்து வெளியேற்றினார் என்று கூறியிருந்தார்.