கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதி மோசடி விசாரணையின் போது, நஜிப் தனது சொந்த கணக்கை நிர்வகிக்கவில்லை என்றும், அவரது தனிப்பட்ட கணக்கிற்கு செலுத்தப்பட்ட 32 மில்லியன் ரிங்கிட் பற்றி தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான வெளிச்செல்லும் மற்றும் கணக்கில் செலுத்தப்படும் பரிவர்த்தனைகள் குறித்து வங்கி அவருக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் நஜிப் கூறினார். துணை அரசு வழக்கறிஞர் டத்தோ வி.சிதம்பரத்திற்கு அவர் பதிலளித்த போது இவ்வாறு கூறினார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சம்பந்தமான 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான மூன்று நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் நஜிப் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.