Home One Line P1 கிறிஸ்துமஸ் குறித்த சர்ச்சையான பதிவுக்கு விளக்கம் கேட்கப் போய், தமக்கு டுவிட்டர் கணக்குகளே இல்லை என்ற...

கிறிஸ்துமஸ் குறித்த சர்ச்சையான பதிவுக்கு விளக்கம் கேட்கப் போய், தமக்கு டுவிட்டர் கணக்குகளே இல்லை என்ற ஜாகிர் நாயக்!

851
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிறிஸ்துமஸ் தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடுவதும், வாழ்த்துகளைக் கூறுவதும் பாவத்திற்குரியச் செயல் என்று சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தனது டுவிட்டர் கணக்கில் முன்பு பதிவிட்டது தற்போது மீண்டும் தலைத்தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், தமக்கு டுவிட்டர் கணக்குகள் ஒன்றும் இல்லை என்று ஜாகிர் நாயக் தற்போது கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று வெள்ளிக்கிழமை தலைநகரில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் உச்ச மாநாட்டில் சந்தித்தபோது, மலேசியாகினியிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இருப்பினும், இது குறித்து ஜாகிர் மேலும் கருத்துகள் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நேற்று வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜாகிர் நாயக், வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம் பிரதிநிதிகள் உட்பட, அவரை வரவேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டது பரவலாகப் பகிரப்பட்டது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதால், கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்துகளைக் கூற வேண்டாம் என்று ஜாகிர் தனது பதிவில் முஸ்லிம்களை எச்சரித்ததாக முந்தைய ஊடக செய்திகள் தெரிவித்தன.