Home One Line P2 எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் ‘ஹீரோ’ படத்தின் 2 நிமிட காட்சி வெளியீடு!

எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் ‘ஹீரோ’ படத்தின் 2 நிமிட காட்சி வெளியீடு!

942
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) வெளிவர இருக்கும்ஹீரோதிரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட இரண்டு நிமிட காட்சிகளை படக்குழு இணையத்தில் வெளியாக்கி, தற்போது அது பரவலாகி வருகிறது.

ஒரு சூப்பர் ஹீரோவாக முதன் முதலாக சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், விவேக், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ‘ஹீரோ’ படத்திலிருந்து நீக்கப்பட்ட அந்த இரண்டு நிமிட காட்சிகளைக் காணலாம்: