கோலாலம்பூர்: சீனக் கல்வியாளர் குழுவான டோங் சோங் ஏற்பாடு செய்யும், ஜாவி போதனைக்கு எதிரான காங்கிரஸ் மேலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்தார்.
இக்காங்கிரஸ் தொடரப்பட்டால், மலாய்க்காரர்கள், அவர்களுக்கென்ற தீவிரமான வழியில் பதில் கூறுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.
“அவர்கள் சீனர்களின் உணர்வோடு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், மலாய்க்காரர்களும் மலாய் உணர்வோடு செயல்படுவார்கள். சீனப் பள்ளிகளை மூடப்படுவது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.”
“நாம் பல இன நாட்டில் இருக்கிறோம், எனவே மற்றவர்களின் உணர்வுகள் குறித்து நாம் அக்கறை கொள்வது முக்கியம்” என்று கோலாலம்பூர் உச்ச மாநாட்டில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறினார்.
அரேபிய வனப்பெழுத்து போதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி எழுத்தை நீக்கக் கோருவதற்காக சீன அமைப்பு காங்கிரஸை நடத்த டோங் சோங் திட்டமிட்டுள்ளது.