Home One Line P2 டில்லி, வட இந்தியாவில் நிலநடுக்க அதிர்வுகள்

டில்லி, வட இந்தியாவில் நிலநடுக்க அதிர்வுகள்

675
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் தலைநகர் டில்லி பகுதியையும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் வலுவான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த அதிர்வுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டன.

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்ட இந்த நில அதிர்வுகளால் இதுவரையில் உயிருடற் சேதங்களோ, பொருட் சேதங்களோ அறிவிக்கப்படவில்லை.

சுமார் பத்து வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வுகள் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து சுமார் 245 கிலோமீட்டர் தொலைவில், தரையிலிருந்து 190 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

வட இந்தியாவின் மதுரா, லக்னோ, பிரயாக்ராஜ், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளிலும் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், பாகிஸ்தானின் லாகூர் வட்டாரத்திலும் மக்கள் பீதியுடன் வெளியேறியதாகவும் செய்திகள் வரத் தொடங்கியிருக்கின்றன.