Home One Line P1 “மகாதீர் உலகின் சக்திமிகு நாடுகளின் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது!”- வீ கா சியோங்

“மகாதீர் உலகின் சக்திமிகு நாடுகளின் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது!”- வீ கா சியோங்

1023
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து பெரிய நாடுகளைப் புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

மகாதீர் பல அனுபவங்களைப் பெற்ற தலைவர் என்பது மறுக்கமுடியாதது, ஆனால் அதே நேரத்தில் அவர் உலகின் முக்கிய சக்திகளுடன் சண்டையிடும் மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்.”

அவர் விருப்பப்படி தொடர்ந்து பேசினால், அது பல முக்கிய நாடுகளை மட்டும் புண்படுத்துவதோடு, நிச்சயமாக நம் நாட்டை பாதிக்கும்என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மகாதீர் பெரிய நாடுகளுடனான மோதல்களைத் தவிர்த்து,  நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் உலகளாவிய பொருளாதாரத்தின் நிச்சயமற்ற நிலையை எவ்வாறு கையாள்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய குடியுரிமையின் புதிய சட்டம் குறித்த மகாதீரின் சமீபத்திய அறிக்கையை வீ குறிப்பிட்டார். கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி, இந்திய அரசாங்கம் நாட்டின் மலேசிய தூதரை உத்தியோகபூர்வ ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது அமர்வில் (யுஎன்ஜிஏ) நடந்த பொது விவாதத்தின் போது, காஷ்மீர் மற்றும் ஜம்முவில் நடந்த மோதல்களைக் குறித்து மகாதீர் கருத்துகளைத் தெரிவித்து, அதனை இந்தியாவும் எதிர்த்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கில், ​​சீனப் பிரதமர் லி கெகியாங்குடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய காலனித்துவம் பற்றி பேசியதோடு, சிங்கப்பூருக்கு நீர் விலைகள் விற்கப்படுவது குறித்தும் விவரித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த வீ, இந்த வாரம் கோலாலம்பூர் உச்ச மாநாட்டிற்கு ஈரான் மற்றும் கத்தார் தலைவர்களை அழைத்ததன் பேரில், மலேசியா மற்றும் சவுதி அரேபியாவின் அரசதந்திர உறவுகளை பாதித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​நம் அரசதந்திர பேரழிவுக்கு முடிவில்லாதது போல் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்தும் கருத்துகளை தெரிவித்த மகாதீரின் அறிக்கையை வீ குறிப்பிட்டார். இது குறித்து அமெரிக்கா எதிர்வினை விடுக்கக்கூடும் என்று அவர் கூறினார்.