Home One Line P1 ஊழியர் சேமநிதி வாரியத்தின் மனிதாபிமானமற்ற மோசமான சேவைக்கு மக்கள் காட்டம்!

ஊழியர் சேமநிதி வாரியத்தின் மனிதாபிமானமற்ற மோசமான சேவைக்கு மக்கள் காட்டம்!

735
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஊழியர் சேமநிதி வாரிய (ஈபிஎப்) பங்களிப்பாளர் ஒருவரின் குடும்பத்தாருக்கு மோசமான சேவையை வழங்கிய ஜோகூர் பாரு அலுவலகத்தின் செயலைக் கண்டித்து பொது மக்களடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதனை அடுத்து, ஊழியர் சேமநிதி வாரியம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்குடும்பத்தினரின் மோசமான சேவை அனுபவத்திற்காக மன்னிப்பு கோரியது.

ஜோகூர் பாருவில் உள்ள ஒரு சேமநிதி அலுவலகத்தில், சம்பந்தப்பட்டவரின் விவகாரங்களைத் தீர்க்க, மருத்துவ வண்டியைப் பயன்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டது பலரின் கண்டனத்திற்கு ஆளானது.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட அந்த சேமநிதி வாரிய அதிகாரியின் மோசமான சேவை  தொடர்பான சமீபத்திய செய்திகள் குறித்து ஈபிஎப் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், உறுப்பினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களுக்கு அது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தமது முகநூல் பக்கத்தில் நூர் ஷீலா அப்துல்லா எனும் நபர் பதிவிட்டுள்ளார். தனது 56 வயதான சகோதரி, ஊனமுற்று படுக்கையில் இருந்தவரின் அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். முடியாத நிலையில் அவரது 10,000 ரிங்கிட் சேமிப்புப் பணத்தைஎடுப்பதற்காக அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழலை அந்த அலுவலகம் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பங்களிப்பாளர்களுக்கு சிறந்த மற்றும் அதிக அக்கறையுள்ள சேவைகளை வழங்கும் வகையில், தற்போதைய செயல்முறையை மேம்படுத்த கற்றுக்கொண்டதாக ஈபிஎப் உறுதியளித்துள்ளது.