Home One Line P1 அன்வார் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் நாளில் அவர் எங்கிருந்தார் என்பதை காவல் துறை விசாரிக்கிறது!

அன்வார் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் நாளில் அவர் எங்கிருந்தார் என்பதை காவல் துறை விசாரிக்கிறது!

885
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மீதான பாலியல் குற்றச்சாட்டு செய்யப்பட்டது தொடர்பில், குறிப்பிட்ட அந்நாளில் அன்வார் இப்ராகிம் எங்கே இருந்தார் என்று காவல் துறை விசாரித்து வருவதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமீட் பாடோர் தெரிவித்தார்.

நான் நம்புகிறேன் இது தெரிந்து விட்டால் இலகுவாக இருக்கும். ஒருவர் வேறொரு கதைக் கூறும் போது, மற்றொருவர் வேறொன்று கூறுகிறார். அன்றைய தினம் அன்வார் எங்கிருந்தார் என்பதை காவல் துறையினர் அடையாளம் காண முயற்சி செய்கிறார்கள்என்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தமது முன்னாள் ஆய்வு அதிகாரியாக பணியாற்றிய முகமது யூசுப் ராவுத்தருக்கு,  பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆயினும், இந்த குற்றச்சாட்டுகளை அன்வார் மறுத்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி யூசுப் ராவுத்தர் மீது நடத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் (பாலிகிராப்) பரிசோதனையை நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்த முடியாது என்று அப்துல் ஹாமீட் கூறினார்.

காவல் துறைக்கு அளிக்கப்பட்ட அறிக்கை சரியானதா என்பதை அறிய இந்த சோதனை பயன்படுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

பாலிகிராப் சோதனை உண்மையில் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.என்று அவர் கூறினார்.