Home One Line P1 அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘ஜாவி தேசிய காங்கிரஸ்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘ஜாவி தேசிய காங்கிரஸ்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

927
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பள்ளிகளில் ஜாவி பாடத்தின் அறிமுகத்தை எதிர்த்து மற்றொரு எதிர்ப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலாங்கூர் காஜாங்கில் சீனக் கல்வியாளர் அமைப்பு வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி நடத்தும் நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்த எதிர்ப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களை காட் அதிரடி குழு (செகாட்) என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஆர்வலர்கள் குழு, இன்று இந்த நிகழ்ச்சி குறித்து அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

சீன மற்றும் தமிழப்பள்ளிகளில் ஜாவி பாடத்தை நிராகரித்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் ஜாவி தேசிய காங்கிரஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் செயலாளர் அருண் துரைசாமி கூறுகையில், அரசாங்கத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சகத்தை வலியுறுத்த விரும்புவதாகக் கூறினார்.

இம்முறை அது சீனர்கள், இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சபா மற்றும் சரவாக் பிரதிநிதிகள்  ஈடுபட வேண்டும்என்று அருண் கூறினார்.

பலருக்கு புரியாததால், ஜாவி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளையும் மாநாடு ஆராயும் என்று அவர் குறிப்பிட்டார்.