புது டில்லி: குடியுரிமை திருத்தச் சட்டக் கொள்கைகள் தொடர்பாக இந்தியாவின் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டதை அடுத்து, புது டில்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகளை நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
2018-க்குள், இந்தியா ஏற்கனவே உலகில் அடிக்கடி இணைய சேவையை இடைநிறுத்தம் செய்த நாடாக உள்ளது என்று இணைய ஆதரவு குழு அக்சஸ் நாவ் (Access Now) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, உலகின் மொத்த இணைய இடைநீக்கங்களில் 67 விழுக்காடு என்று ராய்ட்டர்ஸ் விளக்கியுள்ளது.
இணைய அணுகல் அல்லது இணைய முடக்கம் நிறுத்தப்படுவது பொதுவாக அரசால் கட்டளையிடப்படுகிறது. கைபேசி பயனர்களுக்கு எந்த சமிக்ஞையும் கிடைக்காத வகையில் தொலைத்தொடர்பு நிறுவனம் சேவையை நிறுத்தும்.
ஜனவரி 2012 முதல், இந்தியாவில் இணைய சேவைகள் 373 முறை இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநீக்கம் காவல் துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று இந்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.