Home One Line P1 மின்னல் ஏற்பாட்டில் “நெஞ்சே எழு” – காதர் இப்ராகிமின் இலவச உரை

மின்னல் ஏற்பாட்டில் “நெஞ்சே எழு” – காதர் இப்ராகிமின் இலவச உரை

1163
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மனிதனின் ஆற்றல்கள் என்ன? அவற்றை எப்படி எல்லாம் வளர்த்து கொள்ளலாம்? சோர்ந்து போன மனங்களுக்கு எப்படி உற்சாகம் தருவது? நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை வாழ என்ன செய்யலாம்? பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டா? நமக்கான வாய்ப்பு பாதைகள் நிறைய உள்ளன, அவற்றை நோக்கி எப்படி பயணம் செய்வது?

இப்படியான அனைத்து கேள்விகளுக்கும் நாட்டின் பிரபல தன்முனைப்பு உரையாளர் பேராசிரியர் முனைவர் காதர் இப்ராகிம், மின்னல் பண்பலை (எப் எம்) ஏற்பாடு செய்திருக்கும் “நெஞ்சே எழு” தன்முனைப்பு நிகழ்ச்சியில் பயனான உரை வழங்கவுள்ளார்.

முற்றிலும் இலவசமான இந்நிகழ்ச்சி, ஜனவரி 4-ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை மணி 4-க்கு, ஆர்டிஎம்மின் அங்காசாபுரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியம் பெர்டானா மண்டபத்தில் இரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

2020ஆம் ஆண்டில் நேயர்களின் திட்டங்களும் தீர்மானங்களும் வெற்றி பெறவும்
புதிய நம்பிக்கை பெறவும் வாழ்த்துகளோடு தன்முனைப்பும் தருகிறது மின்னலின் “நெஞ்சே எழு” நிகழ்ச்சி.

காதர் இப்ராகிம் வழங்கும் தன்முனைப்பு கருத்துகளை கேட்டுப் பயன்பெற பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியின் வழி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் மின்னல் பண்பலை தெரிவித்துக் கொள்கிறது.