Home One Line P1 “அடுத்த பிரதமர் யாரென்பதை தீர்மானிக்கும் உரிமை மகாதீருக்கு இல்லை!”- பெர்சே

“அடுத்த பிரதமர் யாரென்பதை தீர்மானிக்கும் உரிமை மகாதீருக்கு இல்லை!”- பெர்சே

1201
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கீழ்தரமான அரசியல் கலாச்சாரத்தை அனுமதித்து, இன மற்றும் மத கருத்துகளை வளர்த்து வருவதாக பெர்சே குற்றம் சாட்டியுள்ளது.

முக்கிய நிறுவனங்களை சீர்திருத்துவதற்கான வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இதனால் எந்தவொரு அரசாங்க நிறுவனங்களும் அதிகார துஷ்பிரயோகத்தை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய இயலும் என்று அது கேட்டுக் கொண்டது.

நம்பிக்கைக் கூட்டணி, அரசாங்கத்தை கைப்பற்றி 19 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்டின் அரசியல் நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளை சீர்திருத்துவதற்கான அவர்களின் தேர்தல் அறிக்கையில் மிகக் குறைவாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.”

#TamilSchoolmychoice

புதிய மலேசியா எனும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக, நாட்டின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும், கீழ்தனமான அரசியல், இனவெறி மற்றும் மதம் ஆகியவற்றின் அரசியலையும் பார்த்து வருகிறோம். மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களின் நம்பிக்கையை அவர்கள் சோர்வடையச் செய்து விட்டனர்என்று பெர்சே கூறியது.

பிரதமர் துன் மகாதீர் முகமட், பதவியில் இருந்து விலகும்போது அவருக்கு பதிலாக யார் பதவி வகிப்பார் என்பது குறித்து இன்று பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகிறது” என்று பெர்சே கூறியது.

எனவே, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு பதவி விலகல் தேதியை நிர்ணயிப்பதன் மூலம் தெளிவான மாற்றத் திட்டத்தை அறிவிப்பதன் மூலம் அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.”

வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், தற்போதுள்ள பிரதமர், அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பது அல்லது மாறுதல் தேதியை நிர்ணயிப்பது அல்ல, மாறாக கலப்பு அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அது குறிப்பிட்டுள்ளது.