Home One Line P1 மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சராகத் தொடர இணைய மனு தொடங்கப்பட்டது!

மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சராகத் தொடர இணைய மனு தொடங்கப்பட்டது!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சராக நிலைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இணைய மனு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை தொடங்கப்பட்டது.

இந்த மனுவை துவா கெஞ்சனா என்ற நபர் தொடங்கினார். 50,000 கையெழுத்துக்களின் ஆரம்ப இலக்கை நிர்ணயித்து, தொடங்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, மஸ்லீயை கல்வி அமைச்சராக தக்கவைக்கக் கோரி 70,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் மனுவில் கிடைத்தன.

நேற்று மாலை, கல்வி அமைச்சின் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

தனது 20 மாத பணிக் காலத்தில், குறிப்பாக ஜாவி, இணைய பள்ளிகள் மற்றும் இலவச காலை உணவு திட்டங்கள் அரசாங்கத்திற்கு பிரச்சனைகளாக நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக மஸ்லீ கூறினார்.

இருப்பினும், கல்வி அமைச்சு பின்பற்றுவதற்கான தெளிவான அடித்தளத்தையும் வழிநடத்துதலையும் நான் அமைத்துள்ளேன் என்று நம்புகிறேன். அவை அனைவருக்கும் ஒழுங்காக அமைக்கப்பட்டன.  அனைவருக்கும் கல்விஎன்ற கோட்பாடுடன் அது நிலைத்திருக்கும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஓர் அறிக்கையின் வாயிலாக, மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை பெற்றதாகத் தெரிவித்தார்.