Home One Line P1 கிமானிஸ் இடைத்தேர்தல்: வாரிசான் கட்சியைப் பிரதிநிதித்து காரீம் புஜாங் களம் இறங்குகிறார்!

கிமானிஸ் இடைத்தேர்தல்: வாரிசான் கட்சியைப் பிரதிநிதித்து காரீம் புஜாங் களம் இறங்குகிறார்!

576
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாரிசான் கட்சியின் வேட்பாளராக, கிமானிஸ் தொகுதித் தலைவர் தலைவர் காரீம் புஜாங் அறிவிக்கப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை வாரிசான் தேர்தல் இயந்திரம் தொடக்க நிகழ்ச்சியில், வாரிசான் கட்சித் தலைவர் முகமட் ஷாபி அப்துல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

67 வயதான காரீம், கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம், 14-வது பொதுத் தேர்தலில் கிமானிஸ் தொகுதியில் வாரிசான் வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானிடம் 156 வாக்குகள் வித்தியாசத்தில் காரீம் தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

அத்தேர்தல் முடிவை எதிர்த்து காரீம் கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதியன்று தேர்தல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதன் பிறகு அனிபா அம்னோவை விட்டு வெளியேறி சுயேட்சை பிரதிநிதியானார்.

1990 முதல் 2013 வரை ஐந்து முறை பொங்கவான் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரீம், சபா மாநில அமைச்சரவையில் அமைச்சர் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வருகிற ஜனவரி 18-ஆம் தேதி கிமானிஸ் நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் நிர்ணயித்தது. வேட்பு மனு ஜனவரி 4-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்கெடுப்பு ஜனவரி 14-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.