சிட்னி: நிலைமைகள் மேம்படும் வரை ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தேவையற்ற பயணத்தை ஒத்திவைக்குமாறு விஸ்மா புத்ரா மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில், குறிப்பாக நாட்டின் கிழக்கு கடற்கரையில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஜனவரி 3-ஆம் தேதி முதல் நியூ சவுத் வேல்ஸ் அமலாக்கப் பிரிவின் ஏழு நாட்கள் அவசர அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் தவிர, பாதிக்கப்பட்ட பகுதிகளான விக்டோரியா மற்றும் ஆஸ்திரேலியா தலைநகர் கூட்டரசு மண்டலம் (ஏசிடி) ஆகியவை அடங்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், உள்ளூர் மற்றும் பிராந்திய அதிகாரிகளுக்கு இணங்கவும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.