Home One Line P1 ஜாவி பாடம்: “யார் சக்தி மிக்கவர், கல்வி அமைச்சா அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கமா?”- பேரரசியார்

ஜாவி பாடம்: “யார் சக்தி மிக்கவர், கல்வி அமைச்சா அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கமா?”- பேரரசியார்

1080
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் ஜாவி பாடக் கற்றலைத் தீர்மானிப்பதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அதிகாரத்தை பேரரசியார் தெங்கு அசிசா அமினா மைமுனா இஸ்காண்டாரியா கேள்வி எழுப்பியுள்ளார். 

யார் அதிக சக்தி வாய்ந்தவர்?”

கல்வி அமைச்சா அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கமா?என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் ஜாவி எழுத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இவ்வாரத் தொடக்கத்தில், துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங், சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் ஜாவி பாடம் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரு பதிவில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அதிகாரத்தை சுட்டிக் காட்டியிருந்தார்.

எனது குழந்தைகளும் அரசுப் பள்ளிக்குச் சென்றுள்ளார்கள்.”

பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்பது அமைச்சின் பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்களால் வழங்கப்படும் கல்வியின் நலன் மற்றும் தரத்தினை மட்டுமே கவனிக்கக் கூடியது” என்று அவர் பதிவிட்டிருந்தார்.