Home One Line P1 பெண்கள் தங்களை நேசிக்கவும், மதிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்

பெண்கள் தங்களை நேசிக்கவும், மதிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்

529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு சிறந்த, மகிழ்ச்சியான மனிதராக நேசிக்க மற்றும் மதிக்க வேண்டும் என்று ராஜா பெர்மாய்சுரி அகோங், துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா இன்று நினைவூட்டினார். பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.

பெண்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அவர்களது குடும்பத்தினரையும் கவனிக்க வேண்டும் என்று அவர் கூறினார், ஏனெனில் ஒரு மகிழ்ச்சியான பெண் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைப் பரப்ப முடியும்.

“வலுவான பெண்கள் இரைவன் அளித்த பலத்துடன் சவால்களை எதிர்கொள்ள முடிகிறது, அதுவே எங்களுக்கு பெண்களை சிறப்புறச் செய்கிறது,” என்று துங்கு அசிசா இஸ்தானா நெகாரா அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியிடப்பட்ட காணொலி பதிவில் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தின் போது பெண்களின் வலிமை தெளிவாகத் தெரிந்தது என்று அவர் விளக்கினார். இந்த ஆண்டின் கருப்பொருளான “Women Rise to Face Challenges” என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, அவர்கள் எழுந்து எந்த சவாலையும் எதிர்கொள்ள முடிந்ததாகக் கூறினார்.

“இங்குதான் ஒரு பெண்ணின் வலிமையைக் காண்கிறோம். பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், பெண்கள் இன்னும் எழுந்து நின்று அந்த சவால்களை எதிர்கொள்வதில் வெற்றிபெற முடிகிறது, ”என்று அவர் கூறினார்.

சமூகம் பெண்களைப் பாராட்டவும், நேசிக்கவும், மதிக்கவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.