Home One Line P1 இலஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசி தலைவரை பிகேஆர் சந்திக்க முயற்சி

இலஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசி தலைவரை பிகேஆர் சந்திக்க முயற்சி

535
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமை ஆணையர் அசாம் பாக்கியுடன் ஒரு சந்திப்பை நடத்த இருப்பதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இலஞ்சம் வாங்கப்பட்டதற்கான சில ஆதாரங்களை அவர் சமர்ப்பிப்பார் என்று சைபுடின் கூரினார்.

“விரைவில், பிகேஆர் செயலாளராக நான்-எம்.ஏ.சி.சி தலைமை ஆணையருக்கு (ஒரு கடிதம்) எழுதி அவருடன் ஒரு சந்திப்பைக் கோருவேன். (அசாம்) ஒத்துழைக்க விரும்பினால், இந்த இலஞ்ச முயற்சி எவ்வாறு நடக்கிறது என்பதற்கான சில ஆதாரங்களை நான் தருவேன், ” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

#TamilSchoolmychoice

சலுகைகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்லது இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து மேலும் வெளிப்படுத்தக் கேட்டபோது, ​​சைபுடின் இப்போது அதை வெளியிட முடியாது என்று கூறினார்.

“எங்களிடம் எல்லா தகவல்களும் உள்ளன. இப்போது எம்.ஏ.சி.சியின் பதிலை முதலில் காண விரும்புகிறோம். எந்த பதிலும் இல்லை என்றால், அதை வேறு பொருத்தமான வழிகளில் செய்வோம்,” என்று அவர் கூறினார்.