Home அரசியல் என்னை தடுத்தது அதிகார துஷ்பிரயோகம் – தியான் சுவா குற்றச்சாட்டு

என்னை தடுத்தது அதிகார துஷ்பிரயோகம் – தியான் சுவா குற்றச்சாட்டு

529
0
SHARE
Ad

tian-chuaபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8- சபா மாநிலத்தில் நுழைய விடாமல் என்னைத் தடுத்தது ஓர் அரசியல் சதி என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும்  பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான்  சுவா கூறினார்.

தன்னை போன்று அரசியல்வாதிகளை மாநிலத்தில் நுழையவிடாமல் தடுத்து வைப்பது, ஆபத்தான ஒரு முன்னுதாரணம் என்று அவர் கூறினார்.

அதேசமயம் என்னை  சபா மாநிலத்திலிருந்து திருப்பி அனுப்பிய  குடிநுழைவு அதிகாரிகள் அதற்காக எந்த காரணமும் கூறவில்லை. தங்களை பிடிக்காதவர்களை திருப்பி அனுப்ப எந்த மாநிலத்திற்கும் அதிகாரம் இல்லை என்று தியான் சுவா கூறினார்.

#TamilSchoolmychoice

தீபகற்ப மலேசியாவிலிருந்து ஒருவரை பாதுகாப்பு காரணமாக தங்களின் மாநிலங்களில் நுழைய விடாமல் தடுக்க சபா சரவாக் மாநிலங்களில் சட்ட ரீதியாக அதிகாரங்கள் உண்டு என்றாலும், இதைத் தவறாகப் பயன்படுத்தி  பொதுத்தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளை  தடை செய்வது முறையாகாது.

மாநிலங்கள் இவ்வாறு தடை விதிக்க  மாநிலங்களுக்கு இந்த அதிகாரம் உண்டா என்று முடிவு செய்ய வேண்டும் எனஅவர் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டார்.

இன்று பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.